×

தோகைமலை அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

தோகைமலை, ஜன. 12: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் கீரனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் முருகானந்தம்(21). இவர் பொறியியல் பட்டப்படிப்பு 3ம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர; முனியப்பன் மகன் கணேசன்(39). கூலி வேலை செய்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் முருகானந்தத்தின் தாய் ராணி என்பவரும், கணேசனும் போட்டியிட்டு உள்ளனர். இதில் கணேசன் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நான் தோல்வி அடைந்ததற்கு உனது அம்மா தான் காரணம் என்று தெரிவித்து முருகானந்தத்தை கெட்ட வார்த்தைகாளால் திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதில் காயமடைந்த முருகானந்தம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் முருகானந்தம் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் 8 ஒன்றியத்திலும் தலைவர், துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் விவரம்
கரூர், ஜன. 12: கரூர் மாவட்டத்தில உள்ள 8ஊராட்சிஒன்றியங்களிலும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவினர் வெற்றிபெற்றனர்.
கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சிஒன்றியங்கள் உள்ளன. நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்கள் ஒன்றியம் வாரியாக:
ஊராட்சி
ஒன்றியங்கள்
தலைவர்
துணை
தலைவர்
கரூர்
பாலமுருகன்
தங்கராஜ்
தாந்தோணி
சிவகாமி
பெரியசாமி
அரவக்குறிச்சி
வள்ளியாத்தாள்
ஆண்டாள்
க,,பரமத்தி
மார்க்கண்டேயன்
குழந்தைசாமி
குளித்தலை
விஜயவிநாயகம்
இளங்கோவன்
தோகைமலை
லதா
பாப்பாத்தி
கடவூர்
செல்வராஜ்
கைலாசம்
கிருஷ்ணராயபுரம்
சந்திரமதி
கவிதா
இதில் கரூர், அரவக்குறிச்சி, கடவூர் ஒன்றிய தலைவர், துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தாந்தோணி, க,பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஒன்றியங்களில் மறைமுகத்தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : College student attacks ,election dispute ,Dohakaimalai ,
× RELATED ஆற்றுவாரி கரையில் உடைப்பு ஏற்பட்டு...