×

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக நடந்த சிவசேனா நிர்வாகி மீது நடவடிக்கை

திருப்பூர், ஜன.12: திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாத் சார்பில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 10ம் தேதி திருப்பூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்கள் முன்பும் இமாம்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பூரில் அனைத்து இடங்களிலும் மிகவும் அமைதியான முறையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிவசேனா அமைப்பைச் சேர்ந்த முருக தினேஷ் என்பவர் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு மத கலவரத்தை தூண்டும் வகையில் காரில் வந்து இடையூறு செய்தார். ஆகையால் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர்.

Tags : administrator ,Shiv Sena ,Muslims ,
× RELATED இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா...