×

வளர்ச்சிதிட்ட பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

உடுமலை,ஜன.12:  உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
உடுமலை மற்றும் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
உடுமலை ஒன்றியத்தில், பெரியகோட்டை ஊராட்சியில் பிஏபி வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டும் பணி, தார்ச்சாலை அமைக்கும் பணி, கோட்டமங்கலம் ஊராட்சியில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை பார்வையிட்டார்.
குடிமங்கலம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் நடைபெறும் விளையாட்டு மைதானம், குடிமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஆத்துக்கிணத்துப்பட்டி ஊராட்சியில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, தார்ச்சாலை பணி என மொத்தம் இரு ஒன்றியங்களிலும் ஒரு கோடியே 14 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் நடைபெறும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்