×

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பொங்கலூர்,ஜன.12:  திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் பல்லடம் கேத்தனூர் அருள்புரம் ஆகிய இடங்களில் நடந்தது.
கோட்ட அலுவலர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பிரசார நிகழ்ச்சியில் கங்கை கருங்குயில் கலைக் குழு சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதனால் தூக்கமின்மை வாந்தி, வயிற்றுப்புண், காச நோய் உயர் ரத்த அழுத்தம் இருதய வீக்கம் மலட்டுத்தன்மை, கண் பார்வை மங்குதல், கைகால் வலிப்பு, நரம்பு மண்டலத்தை தாக்கி சோர்வடைய செய்வது, கல்லீரல் பாதிப்பு, மாரடைப்பு, திடீர் மரணம், தற்கொலைக்குத் தூண்டுதல், அவப்பெயர், குழந்தைகளின் முன்னேற்றத்தை பாதிக்கும் பல்வேறு தீமைகள் குறித்து விழிப்புணர்வு பாடல்கள் பாடியும், பாடலுக்கு ஏற்றவாறு பறையடித்து, கரகம் தூக்கி நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...