×

அணிக்கடவு ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு

உடுமலை, ஜன. 12:  அணிக்கடவு ஊராட்சி துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகே உள்ள அணிக்கடவு ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அழகம்மாள் வெற்றி பெற்றார். துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் லலிதாமணி, அ.தி.மு.க. சார்பில் ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டனர். ஊராட்சி தலைவரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் வாக்களித்தனர். இதில் இரு வேட்பாளர்களும் தலா 5 ஓட்டுகள் பெற்றனர். இதையடுத்து, விதிமுறைப்படி, இருவரிடமும் ஒப்புதல் பெற்றபின், தேர்தல் அதிகாரி குலுக்கல் நடத்தினார். இதில் தி.மு.க.வை சேர்ந்த லலிதா மணி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வினர் பிரச்னையை கிளப்பினர். தகவல் அறிந்து, ஊராட்சி தி.மு.க. செயலாளர் கிரி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மறு குலுக்கல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதை சுட்டிக்காட்டினர். இதையடுத்து, லலிதாமணி தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி  நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Vice President of Teamwork ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்