×

அனுமன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

திருப்பூர், ஜன.12: திருப்பூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் நேற்று ஆர்.டி.ஒ அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர், முதலிபாளையம் கிராமம் கெங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆர்.டி.ஓ கவிதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் கெங்கநாயக்கன்பாளையத்தில்  உள்ள அனுமந்தராயசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள இடங்களிலும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தியும் வெயில் சமயத்தில் மர நிழலில் ஓய்வெடுத்தும் வருகிறார்கள். கோயிலின் அருகில் உள்ள தனியார்  சிலர் கோயிலுக்கு சேர வேண்டிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோடு முயற்சி செய்து வருகிறார்கள். கோயில் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு ஆரம்ப சுகாதார நிலையம் அமையுமானால் பிறப்பு, இறப்பு போன்ற இயற்கை நிகழ்வின்போது கோயில் நடை மூட வேண்டிய நிலை ஏற்படும் மற்றும் ஆகம விதிப்படி நடைபெறும் பூஜைகளில் காலதாமதம் தொய்வு ஏற்படும். எனவே, கோயில் அருகில் சுகாதார நிலையம் அமையக்கூடாது. மேலும், தனி நபர் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது எனக்கோரி மனு அளித்தனர்.

Tags : Hanuman Temple ,
× RELATED அயோத்தியில் உ.பி. அமைச்சரவை கூட்டம்