×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மஞ்சூரில் விழிப்புணர்வு பேரணி

மஞ்சூர், ஜன.12: மஞ்சூரில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
   குந்தா வருவாய்துறை சார்பில் வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. மஞ்சூர் மேல்பஜாரில் துவங்கிய பேரணியை தாசில்தார் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார், நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார், எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கவுசல்யா, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், ராஜன், தினேஷ்குமார், சவுந்திரராஜன் மற்றும் ஆசிரியர்கள், வருவாய் துறையினர் மற்றும் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி, எடக்காடு அரசுப்பள்ளிகளை சேர்ந்த 500கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பொதுமக்கள் மத்தியில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் மற்றும் தேர்தல்களில் ஜனநாயக கடமையாற்றும் வகையில் வாக்காளிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பேரணி மஞ்சூர் மேல்பஜார் பள்ளிவாசல் பகுதியில் துவங்கி மெயின் பஜார், மணிக்கல்மட்டம், கொட்டரகண்டி வழியாக குந்தா தாலுகா அலுவலகம் வரை சென்றது.
தொடர்ந்து வாக்காளர்கள் மத்தியில் தாசில்தார் சரவணன் பேசுகையில், ‘‘18வயது பூர்த்தியானவர்கள் தவறாமல் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும். இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாம்கள் மூலம் விண்ணப்பங்களை அளிக்கலாம்,’’ என்றார்.

Tags : Awareness rally ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி