×

சூலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது

சூலூர்,ஜன.12:சூலூர் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக அதிமுகவை சேர்ந்த பாலசுந்தரம் மற்றும் திமுகவை சேர்ந்த தமிழரசி செந்தில்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
அதைத் தொடர்ந்து ஒன்றியக் குழு உறுப்பினர் வாக்களித்தனர். அதன் பின்னர் தேர்தல் அலுவலர் வாணி வாக்குகளைப் பிரித்து உறுப்பினர்கள் முன்பு எண்ணப்பட்டது. அதில் அதிமுகவை சேர்ந்த பாலசுந்தரம் 8 வாக்குகள்  பெற்றிருந்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்று வழங்கப்பட்டது.
பின்னர் மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற பின் அதிமுகவில் இணைந்த சுரேந்திரமோகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு சூலூர் எம்.எல்.ஏ.,கந்தசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் .
அதேபோல் சுல்தான்பேட்டை ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைந்த சூலூர் எம்எல்ஏ., கனகராஜின் மனைவி ரத்தினம் கனகராஜ் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் அதிமுகவில் சேர்ந்த மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
அதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags : AIADMK ,President ,Sulur Panchayat Union ,
× RELATED சொல்லிட்டாங்க…