×

கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி

கோவை, ஜன.12: ேகாவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்த இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 17 ஊராட்சி கவுன்சிலர்களில், 7வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சாந்திமதி மனு தாக்கல் செய்தார். இவருக்கு போட்டியாக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து சாந்திமதி போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2 மகள் உள்ளனர்.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் அ.தி.மு.க.வினர் 10 பேர், தி.மு.க.வினர் 5 பேர், பா.ஜ.வினர் 2 பேர் உள்ளனர். ஊராட்சி தலைவராக தேர்வு பெற்ற சாந்திமதி சூலூர் ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர். இவரது கணவர் தோப்பு அசோகன் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர். இவர் 2 முறை மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். நேற்று நடந்த மறைமுக தேர்தலுக்கு ெபாள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ராதாவேணி வரவில்லை.  
மாவட்ட ஊராட்சி தலைவராக பதவியேற்ற சாந்திமதி தன்னைவிட வயதில், கட்சியில் மூத்த கவுன்சிலர்களின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து சாந்திமதி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இதற்கு முன் கட்சி பதவியை தவிர வேறு எந்த பதவியும் இருந்ததில்லை. கோவை மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஓட்டுப்பதிவு நடக்கும் என நினைத்திருந்தேன். கட்சி நிர்வாகத்தினர் என்னை மனு தாக்கல் செய்யுமாறு கூறினர். இதன்படி மனு தாக்கல் செய்தேன். எனக்கு போட்டியாக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனக்கு கிடைத்த பதவியை வைத்து ஊராட்சி பகுதியில் மக்களுக்கான திட்டங்களை செய்வேன். குடிநீர், சாக்கடை, ரோடு, மயானம், மருத்துவமனை கட்டி தர முயற்சி செய்வேன். மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.
 நேற்று மதியம் நடந்த மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் அமுல் கந்தசாமி போட்டியிட்டார். இவரை தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் எதிர்த்து போட்டியிட்டார். 17 கவுன்சிலர்களில் 16 பேர் மட்டுமே வந்திருந்தனர். ெபாள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் ராதாவேணி வரவில்லை. ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டதில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் அமுல் கந்தசாமி 12 ஓட்டுகளும், தி.மு.க. கவுன்சிலர் கார்த்திக் 4 ஓட்டும் பெற்றனர். இதில் அமுல் கந்தசாமி வெற்றி ெபற்று மாவட்ட ஊராட்சி துணை தலைவராக தேர்வு பெற்றார்.

Tags : panchayat chief ,district ,Coimbatore ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...