×

உக்கடம் மீன் மார்க்கெட் புதிய கேட் திறப்பு

கோவை, ஜன.12: கோவை உக்கடம் லாரி பேட்டை அருகேயுள்ள மொத்த மீன் மார்க்கெட்டின் பின்பக்க பகுதியில் உள்ள புதிய ேகட் திறக்கப்பட்டது. இதனால் சுற்றியுள்ள பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை உக்கடம் லாரி பேட்டை அருகே மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.
இங்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்து தினமும் 50 டன் அளவில் கொண்டுவரப்படும் பல வகையான மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மார்க்கெட்டில் வார இறுதி நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் இருக்கும். மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை என புகார் இருந்து வருகிறது. இப்பகுதியில் தாறுமாறாக பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உக்கடம் கழிவு நீர் பண்ணை செல்லும் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வழி அமைக்கப்பட்டு மீன் மார்க்கெட்டிற்குள் செல்ல கேட் போடப்பட்டது. இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. ஆனால், தற்போது வரை புதிய கேட் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய கேட் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் இப் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ucadam Fish Market New Cat Opening ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்