×

பெரியார் 1000 வினா விடை போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

ஈரோடு, ஜன. 12: தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாளையொட்டி பெரியார் சிந்தனை உயராய்வு மைய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பெரியார் 1000 என்ற வினா விடை போட்டி நடத்தியது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு திராவிடர் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் நவீன், அஜய், கிருத்திக் ரிச்சர்டு ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலஅசோக்குமார், பேராசிரியர் காளிமுத்து, நிர்வாகிகள் நற்குணன், சிற்றரசு ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவில் நிர்வாகிகள் அண்ணாதுரை, செந்தில்குமார், ஈரோடு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் மோகனசுந்தர்ராஜ், திராவிடர் கழக இளைஞரணி மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : winners ,Periyar 1000 Quiz Competition ,
× RELATED தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம்...