×

கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணி துவக்கம்

சத்தியமங்கலம், ஜன. 12:  சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கியது.
 பவானிசாகர் அணையிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு ஆக.16ம் தேதி கீழ்பவானி பாசனப்பகுதிகளில் இரட்டைப்படை மதகு பாசனப்பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
தற்போது பாசனப்பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிரில் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், சத்தியமங்கலம் பகுதியில் நெல் அறுவடைப்பணிகள் தொடங்கியுள்ளது. மாரனூர், செண்பகபுதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் இயந்திரம் மூலம் அறுவடைப்பணி நடந்து வருகிறது. இதற்கென கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்திற்கு ஒரு மணி நேர வாடகை ரூ.3 ஆயிரம் செலவாகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : areas ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்