×

உறுப்பினர்கள் புறக்கணித்ததால் பாதரை ஊராட்சியில் தேர்தல் ஒத்திவைப்பு

பள்ளிபாளையம், ஜன.12: உறுப்பினர்கள் புறக்கணித்ததால், பாதரை கிராம  ஊராட்சியில் நடைபெற இருந்த துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை கிராம ஊராட்சியில் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் செங்கோட்டையனை விட, அதிமுக வேட்பாளர் கணேசன் 18 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருந்தார். 6 உறுப்பினர்களை கொண்ட இந்த ஊராட்சியில் திமுகவின் பலம் 4 ஆகவும், அதிமுகவுக்கு 2 ஆகவும் இருந்தது. இந்நிலையில் திமுக உறுப்பினரை அதிமுகவினர் வளைத்து போட்டதால் துணைத்தலைவர் தேர்தலுக்கு இருதரப்பினரும் சம பலத்துடன் இருந்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் தனது வாக்கை பதிவு செய்தால் அதிமுகவினர் துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதிமுக ஆதரவு உறுப்பினர்கள் பங்கஜம், கிருத்திகா, சுப்ரமணி ஆகியோர் ஊராட்சி மன்றத்திற்கு வந்தனர். ஆனால் திமுக ஆதரவு உறுப்பினர்களான ராஜ்குமார், தங்கராசு, மணிமேகலை ஆகியோர் தேர்தல் நடைபெறும் அலுவலகத்திற்குள் வரவில்லை. தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து தேர்தல் நடத்திட போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக அதிகாரி அறிவித்தார்.

Tags : elections ,panchayat ,Patara ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...