×

மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர்கள் தேர்வு

நாமக்கல், ஜன.12: நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு தேர்தலுக்கான நடைமுறைகள் துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். மதியம் துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் எம்பி சுந்தரம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மின்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி, நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் மற்றும் அதிமுகவினர், புதிய தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக்ழு  துணைத்தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ராஜவேலு வெற்றி பெற்றார். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்வு நடந்தது. இதில் அதிமுக உறுப்பினர் தீபா கிருஷ்ண மூர்த்தி போட்டியின்றி தேர்வு பெற்றார்.சேந்தமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவராக 4வது வார்டு உறுப்பினர் கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கொல்லிமலை ஒன்றியக்குழு துணைத்தலைவராக 6வது வார்டு அதிமுக உறுப்பினர் கொங்கம்மாள் போட்டியின்றி தேர்வானார். எருமப்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவராக 3வது வார்டு அதிமுக உறுப்பினர் லோகநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ராசிபுரம் ஒன்றியக்குழு  துணைத் தலைவர் தேர்வு நேற்று மதியம் 3.30 மணிக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்பகல் 4 மணி வரை தலைவர் உட்பட உறுப்பினர்கள் யாரும்ல ஒன்றிய அலுவலகம் வரவில்லை. இதனால் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, தேர்தல் அலுவலர்கள் கருணாநிதி உத்தரவிட்டார்.

வெண்ணந்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்வு நடந்தது. இதில்  அதிமுகவை சேர்ந்த பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில், அதிமுகவை சேர்ந்த யசோதா செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில், 4வது வார்டில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட பெரியசாமி வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ் வழங்கினர். கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : District Panel Select Vice Presidents ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா