×

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அதிமுகவினருக்கு வெள்ளிவாள்

சேந்தமங்கலம், ஜன.12: கொல்லிமலை ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மாதேஸ்வரி அண்ணாதுரை, துணைத்தலைவராக கொங்கம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி, பாலுசாமி, தனுஷ்கோடி, பாப்பாத்தி, லட்சுமியும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவபிரகாசம், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகலிங்கம், பழனிசாமி, பாலு, சொரக்காவெட்டி சுப்ரமணியன், பழனியம்மாள், செல்லமுத்து, ஜெகதீசன், செல்வராஜ், செல்லம்மாள் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றிய அதிமுக சார்பில் செம்மேடு, வல்வில்ஓரி அரங்கத்தில் நடந்தது.

 நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரிக்கு, சந்திரசேகரன் எம்எல்ஏ வெள்ளி வாள் பரிசாக வழங்கினார். உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தேர்தல் பணியாற்றிய அதிமுக நிர்வாகி யுவராஜூக்கு சால்வை அணிவித்து, வெள்ளி வாள் பரிசு வழங்கப்பட்டது. இதில் சேந்தமங்கலம் நகர செயலாளர் ராஜேந்திரன், கொல்லிமலை பேரவை செயலாளர் வருணன், சேந்தமங்கலம் மீனவரணி செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில்குமார், வக்கீல் சசிகுமார்,  ஒன்றிய துணை செயலாளர் வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : elections ,AIADMK ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!