×

கடும் போட்டிக்கு இடையே துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

பள்ளிபாளையம், ஜன.12: கடும்  போட்டிக்கு இடையே குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவியை  திமுக வேட்பாளர் புனிதா பிரபாகரன் கைப்பற்றினார். பள்ளிபாளையம் ஊராட்சி  ஒன்றியம், குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நேரடி தேர்தலில்  திமுக வேட்பாளர் கவிதா வேலுமணி வெற்றி பெற்றார். ஆனால் துணைத்தலைவர்  பதவிக்கு கடுமையான போட்டி நிலவியது. அதிமுக வேட்பாளராக ஏற்கனவே  துணைத்தலைவராக பணியாற்றிய ராஜூ போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக  வேட்பாளராக புனிதா பிரபாகரன் போட்டியிட்டார். திமுகவும் அதிமுகவும்  சமபலத்துடன் போட்டியிட்டது. அதிமுகவினர் தங்கள் ஆதரவு உறுப்பினர்களின்  வீடுகளில் கூட்டமாக அமர்ந்து கொண்டு விடிய விடிய கண்காணித்து பாதுகாப்பு  கொடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை இருதரப்பினரும் வேட்புமனு தாக்கல்  செய்தனர். இறுதியில் திமுக வேட்பாளர் இரு ஓட்டுகள் அதிகம் பெற்று அதிமுக  வேட்பாளரை தோற்கடித்தார்.

Tags : rivalry ,Vice President ,DMK ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!