×

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.12: பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.  பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக கலைஅறிவியல்  கல்லூரியில், கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் “வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2020” பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பாப்பிரெட்டிபட்டி தாலுகா தேர்தல் பிரிவு மற்றும் கல்லூரி தேர்தல் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.பாப்பிரெட்டிப்பட்டி, தேர்தல் பிரிவு தாசில்தார் செங்கோட்டையன் முன்னிலை வகித்து  முகாம் பற்றிய விழிப்புணர்வை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கல்லூரி தேர்தல் பிரிவு அலுவலர் அருண் நேரு ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் தாலுகா தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா