×

ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் சங்க கூட்டம்

தர்மபுரி, ஜன.12: தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம், நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தங்கராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் (பணிநிறைவு) ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் மகளிர் கலந்து கொண்டு சர்க்கரை பொங்கல் வைத்து மகிழ்தனர். தொடர்ந்து மார்ச் 21ம் தேதி ஆண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. தாசில்தார் (பணிநிறைவு) பட்டியல் வாசித்தார். துணைதலைவர் வேணு, பொருளாளர் திருவேங்கடம், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயளாலர் பிரேமா, ராதா மற்றும் பலர் பேசினர். அழகேசன் நன்றி கூறினார்.

Tags : Revenue Officers Association Meeting ,
× RELATED வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்