×

ஒன்றியக்குழு தேர்தலில் அதிமுக வெற்றி

அரூர், ஜன.12: அரூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவி, மகளிர் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன்மலர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருண் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற பொன்மலர், அரூர் நகரில் உள்ள அம்பேத்கர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காரிமங்கலம்:காரிமங்கலம் ஒன்றியத்தில், மொத்தமுள்ள 21 வார்டுகளில் அதிமுக 14 வார்டுகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று நடந்த மறைமுக தேர்தலில் அதிமுக சார்பில் சாந்தி பெரியண்ணன், திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் மாதையன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சாந்தி பெரியண்ணன் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக ஒன்றிய குழுத் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொண்டது. துணை தலைவர் தேர்தலில், அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் மாவட்ட செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கேபி அன்பழகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,victory ,committee election ,Union ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...