×

புதுப்பாளையம் ஒன்றியத்தில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திடீர் மாயமானதால் பரபரப்பு

செங்கம், ஜன.12: செங்கம் அடுத்த புதுப்பாளையம் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியில் திமுக வேட்பாளர் சுந்தரபாண்டியன் 10 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரமேஷ் 5 வாக்குகள் பெற்றார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சபாநாயகம், பரிமேழலகன் ஆகியோர் சுந்தரபாண்டியன் வெற்றி வெற்றதாக அறிவித்தனர். தொடர்ந்து, மாலை 3 மணிக்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரும் அலுவலக அறையில் காத்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாலை 6 மணி ஆகியும் வரவில்லை.

இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் காந்திருந்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேர்தல் அதிகாரிகள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாலை 6 மணியளவில் ஒன்றிய அலுவலக தகவல் பலகையில், நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டாத அறிவிப்பு ஒட்டப்பட்டது. தொடர்ந்து, இதுகுறித்து புகார் தெரிவிக்க திமுக ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் 9 உறுப்பினர்கள், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்திக்க திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். புதுப்பாளையத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : election ,vice-president ,disappearance ,Nepal ,Union ,election officials ,
× RELATED திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை...