×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 126 கிராம ஊராட்சிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக கருத்து கேட்பு

வேலூர், ஜன.12:ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 126 கிராம ஊராடசிகள் மறுவரையறை செய்யப்படுவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் 3 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மறு கருத்து கேட்பு அடுத்த மாதம் 11ம் தேதி நடக்க உள்ளது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள், ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் ஊராட்சி ஒன்றியங்கள் மறுவரையறை செய்யப்பட்ட பட்டியலை வசித்தார். அதன்விவரம் வருமாறு: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய 3 கிராம ஊராட்சிகளை திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட உள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது ஆலங்காயம் ஊராடசி ஒன்றியத்தில் அமைந்துள்ள செட்டியப்பனூர் மற்றும் கலந்திரா 2 கிராம ஊராட்சி ஒன்றியங்களை ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மரிமாணிகுப்பம், மிட்டூர், பூங்குளம் ஆகிய 3 கிராம ஊராட்சிகளை ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட உள்ளது.வேலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரங்கல்துருகம், அயித்தம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், சின்னவரிகம், தேவலாபுரம், கொல்லகுப்பம், கதவாளம், கைலாசகிரி, கரும்பூர், குமாரமங்கலம், மலையம்பட்டு, மேல்சாணங்குப்பம், மிட்டாளம் மோதகப்பல்லி, நரியம்பட்டு, பாப்பனப்பல்லி, பார்சனாப்பல்லி, பெரியகொம்மேஸ்வரம், பெரியவரிகம், சாத்தம்பாக்கம், தென்னம்பட்டு உட்பட26 கிராம ஊராட்சிகள் திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ளதால், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நீக்கி மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்கப்பட உள்ளது.

வேலூர் மாவட்ட ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டு தற்போது பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அலிஞ்சிகுப்பம் அரவட்லா, பாலூர், பத்தபலப்பள்ளி, எருக்கம்பட்டு, மேல்பட்டி, டி.டி.மோட்டூர் உட்பட 24 கிராம ஊராட்சிகள் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வேலூர் மாமவட்டத்தில் தொடர்வது குறித்தும்.திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலூர் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள அகரம், அக்ரஹாரம், அரிமலை, ஆசணாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், குருவராஜபாளையம், குப்பம்பாளையம், குப்பம்பட்டு, மேல்பள்ளிபட்டு உட்பட 13 கிராம ஊராட்சிகளை மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நீக்கம் செய்து அணகை்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட உள்ளது. அகரம்சேரி, சின்னசேரி, கொள்ளமங்கலம், கூத்தம்பாக்கம், பள்ளிகுப்பம் ஆகிய 5 கிராம ஊராட்சிகளை மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நீக்கி குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மோர்தனா கிராம ஊராட்சியை குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கபட்டு தற்போது சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில உள்ள அம்மாவாரிப்பள்ளி, அவுலரங்பள்ளி, பாலேகுப்பம், இளையநல்லூர், எருக்கம்பட்டு, கொல்லப்பள்ளி, கீரைசாத்து, கொண்டமநாயுடுபாளையம், மாதாண்டகுப்பம்,மேல்பாடி, தெங்கால், வள்ளிமலை, விண்ணம்பள்ளி, வெப்பாலை ஆகிய 20 கிராம ஊராட்சிகள் வேலூர் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளதால் 20 கிராம ஊராட்சிகள் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆயில், கரிக்கல், நந்திமங்கலம், சூரை, தாளிக்கல், பாராஞ்சி, அக்கச்சிகுப்பம், கூடலூர், அய்பேடு, பரவத்தூர், வையாலம்பாடி, வெங்குப்பட்டு ஆகிய 12 கிராம ஊராட்சிகளை சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட உள்ளது.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அன்வர்திகான்பேட்டை, அசமாத்தூர், சித்தாம்பாடி, இச்சிப்புத்தூர், கைனூர், கிழவனம், மின்னல், மிட்டாப்பேட்டை, நந்திவேடுந்தாங்கல், பெருமாள்ராஜ்பேட்டை ஆகிய 12 கிராம ஊராட்சிகள் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துடன் சேர்க்கப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு தற்போது நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அவலூர், களத்தூர், பெரும்புலிபாக்கம் சங்கரம்பாடி ஆகிய 4 கிராம ஊராட்சிகளை காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்க்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஊராட்சி ஒன்றியங்கள் பிரிப்பது, இணைப்பது குறித்து கருத்து தெரிவித்தனர். பின்னர் அந்த கருத்துக்களை 3 மாவட்ட கலெக்டர்களும் மொத்தம் 126 கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் இணைத்தல், பிரித்தல் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் பேசுகையில், ‘அந்த மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு கருத்துக்கள் குறித்து ஆராய்ந்து அடுத்து மாதம் 11ம் தேதி மீண்டும் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்படும். அதிலும் ஆட்சபேனைகள் இருந்தால், தேவையிருப்பின் மற்றொரு கருத்து கேட்பு நடத்தப்படும்’ என்றார்.

முன்னதாக எம்எல்ஏக்கள் ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி, அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோரின் கருத்துக்களை கலெக்டர்கள் கேட்டனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : district ,Vellore ,
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...