×

2 ஒன்றிய கவுன்சிலர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி, ஜன.12: கோவில்பட்டி ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 19 வார்டுகளில்  திமுக-8, இந்திய கம்யூனிஸ்ட்-1, அதிமுக-5, தேமுதிக-1, சுயேட்சை-4 பேரும் வெற்றி பெற்றனர். கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவி பெண் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.
தலைவர் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 9 இடங்கள் உள்ள நிலையில், சுயேட்சைகள் இருவர் ஆதரவு தெரிவித்துள்ளதால் எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.நேற்று தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக இருந்தநிலையில், தேர்தல் அலுவலருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 17வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் துறையூர் செந்தில்முருகன் கடத்தப்பட்டதாகவும் அவரை மீட்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கு தொடுத்தவருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் 17வது வார்டு கவுன்சிலர் செந்தில்முருகனும், 14வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் ராமரும் நேற்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags : Union Councilor ,DMU ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்