×

மன்னார்குடி அடுத்த கோட்டூர் பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரம்

மன்னார்குடி, ஜன. 10: பொங்கல் பண்டிகையையொட்டி கோட்டூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங் களில் பாரம்பரியமிக்க மண் பானைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண்பானைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி 15ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று அதிகாலையில் புத்தாடை அணிந்து, சூரிய பகவானுக்கு மண்பானையில் பொங்கல் வைத்து படைத்து வழிபடுவது வழக்கம். பொங்கலுக்கு கரும்பு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கொத்து போன்றவை களுடன் மண்பாண்ட பொருள்களான பானை, சட்டிகள். இவைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்ய பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். பானை சட்டிகளை செய்வதற்கு பாமணியாறு, கோரையாறு போன்ற பல்வேறு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் வண்டல் மண் எடுத்து மண்பாண்ட ங்களை செய்து வருகின்றனர்.
அதன்படி, நீர், மற்றும் மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண் 2 நாட்களுக்கு ஊரவைக்க படுகின்றன. பின்னர் மறுபடியும் தேவையான அளவு மண்ணோடு குழப்பப் படுகின்றது. களிமண் அச்சில் கைகளால் வார்த்தெடுத்து தேவையான அளவிற்க்கு பானையை வடிவமைத்து வெயிளில் ஒருநாள் முழுவதும் காய வைக்க வேண்டும். மறுநாள் கிட்டதட்ட 500 பானைகளை ஒரே அடுப்பில் வைத்து நெருப்பில் ஏறக்குறைய 5 மணி நேரம் 850 சென்டி கிரேட் சூட்டில் பானையை வேக வைக்க வேண்டும். பின்னர் சூளையிலிருந்து பானைகளை எடுத்து பொங்கலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குன்னியூர், பனையூர், தெற்கு படுகை வடகோபனூர், கோட்டகச்சேரி, சேரி . உள்ளிட்ட 10 கிராமங்களில் மண்பானை தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தினசரி 500 முதல் 1000 மண் பானைகள் தயார் செய்யப் படுகிறது. தயாரிக்கப்பட்ட பானைகளை பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கிராமபுறங்களில் இருந்து நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. வியாபாரிகளும் நேரடியாக வந்து மொத்தமாக பானை களை வாங்கி செல்கின்றனர். மேலும் வெளியூர்களுக்கு மாட்டு வண்டிகளில் சட்டி பானைகளை கட்டி விற்பனைக்கு அனுப்பி வைப்பர்.
உடல் நலனுக்கு உகந்த, மண் வாசனையுடன் இருக்கும் பானைகளில் உணவு சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதனால், மண் பானை பயன்பாடு அதிகரித்து வருகிறது. பொங்கல் திருநாளில் மண் பானை யில் பொங்கல் வைப்பதை இன்றவும் பலர் பின்பற்றி வருகின்றனர். குக்கர் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைப்பதை தவிர்த்து மக்கள் மண் பானைகளில் பொங்கல் வைத்தால் பொங்கல் சுவையாக ருசியாக இருக்கும் என்றும், தங்களின் வாழ்க்கையில் ஆண்டுதோறும் தை பிறந்தா லும் வழி பிறக்காமல் கடந்த 40 ஆண்டு காலமாக இந்தவித மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரணம் கிடைக்காமல் பிழைப்பு செய்துவருவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை வர இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், மண் பானை தயாரிக்கும்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், தேவையான மண் எடுப்பதற்கு தமிழக அரசு சில குறிபிட்ட இடங்களில் அரசு அனுமதி வழங்கியும் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் மண் எடுக்க அனுமதி வழங்க மறுக்கின்றனர்.

இதனால் ஒருமாட்டுவண்டி மண் 6 ஆயிரம் ரூபாக்கு விலை அதிகமாக பணம் கொடுத்து மண் வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தொடர் மழைக் காரணமாகவும் பானைகள் செய்ய முடியவில்லை எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. வருமானத்திற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். மேலும் மண் பாண்டங்கள் செய்ய பயன்படுத்தப்படும் ஏரி மண் தட்டுப்பாடு, விறகு, வைக்கோல் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற வற்றால் தொழில் நலிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித் துள்ளனர். சந்தையில் அளவை பொருத்து சின்ன பானை ரூ.30 முதல் 50 வரை பெரிய பானையின் விலை 50 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் மட்டை சாிவர காயவில்லை என்றாலும் மழை பெய்தாலும் பானைகள் சுடும்போது அதிக அளவில் சேதமாகிவிடுகின்றன. இதனால் வருவாயில் இழப்பு ஏற்படுகிறது என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தொிவிக்கின்றனர்.

Tags : Cottur ,Mannargudi ,area ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...