×

ஆக்ரோஷமாக மோதும் சேவல்கள் தோகைமலை அருகில் கல்லடை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் போராட்டம்

தோகைமலை, ஜன. 10: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி டி.எடையபட்டியை சேர்ந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் அய்யர். இவர் கடந்த 6ம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்து உள்ளதாவது: கல்லடை ஊராட்சி கல்லடையில் சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. மழை காலங்களில் இந்த குளித்தில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயனாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த குளத்தின் ஓர பகுதிகளில் வரத்து வாரிகளை அடைத்து சுமார் 60 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் குளத்திற்கு மழைநீர் வருவதை தடுப்பதோடு குளத்தில் போதிய மழைநீர் தேங்காமல் மற்ற விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக கல்லடையில் உள்ள அரசு குளத்தை ஆய்வு செய்து நீர் நிலைகளில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் இதுகுறித்து அய்யர் தெரிவிக்கையில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ள நிலையில் கல்லடை அரசு குளத்தில் சுமார் 60 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்து உள்ளதோடு, வரத்து வாரிகளையும் அடைத்து உள்ளதை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு எடுத்து உள்ளோம் என்றார்.

Tags : Strike ,invasions ,Dokaimalai ,pond ,Kalladi ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து