×

எம்பி பாரிவேந்தரிடம் கோரிக்கை மனு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.3 உயர்வு

க.பரமத்தி, ஜன. 10: கரூர் மாவட்டத்தில் இரு ஒன்றிய பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 613 மூட்டைகளில் 29019 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.91, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.104க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.3 உயர்ந்து ஏலம் போனது. இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 3582 கிலோ எடையுள்ள 14866 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.22, அதிக விலையாக ரூ.30க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரமும் இதே விலைதான்.

Tags : Parivander ,Rs ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...