×

56வது ஆண்டாக கோலாகலம் குற்றாலம் கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம்

தென்காசி, ஜன. 10: குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் 56வது ஆண்டாக ஆண்டாள் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.  குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று நடத்தப்படும் ஆண்டாள் திருக்கல்யாணம், இந்தாண்டு நேற்று நடந்தது. கல்லூரி செயலர் பரஞ்ஜோதி தலைமை வகித்தார். முதல்வர் கீதா வரவேற்றார். ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மார்கழி மாதம் 30 நாட்களும் மாணவிகள் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி பாடல்களை பாடி வழிபாடு நடத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதி மாணவி விஜி ஆண்டாளாகவும், மாணவி வெண்ணிலா ரங்கமன்னாராகவும் கருதப்பட்டு திருமண நிகழ்வு போன்றே நிச்சயதார்த்தம், முளைப்பாரி, காப்புகட்டுதல் கன்னிகாஸ்தானம், விஷ்ணுஹோமம், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் அழைப்பு, தொடர்ந்து ஆண்டாள் படத்திற்கு திருமாங்கல்யநாண் பூட்டுதல், மாலை மாற்றுதல், மெட்டி அணிதல், அம்மிமிதித்தல் நலுங்கு, பூப்பந்து எறிதல், பொரியிடுதல், ஆரத்தி எடுத்தல், மொய்செய்தல் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் நடந்தது. ஆண்டாள் திருக்கல்யாணத்தை தெற்குமாசிவீதி கற்பகவிநாயகர் கோயில் கணபதிபட்டர் நடத்தி வைத்தார். கோயில்களில் மட்டுமே நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு, நெல்லை மாவட்டத்தில் பராசக்தி மகளிர் கல்லூரியில் மட்டுமே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Andal Tirukkalum ,Kollam ,Korakalum College ,
× RELATED கேரளாவில் பெண் வேடமிட்டு ஆண்கள்...