×

பொதுமக்கள் ஏமாற்றம் கொக்கம்பட்டி பிரிவு சாலையில் புதர்கள் மண்டி சேதமடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடை

கரூர், ஜன. 10: கரூர் மாவட்டம் கொக்கம்பட்டி பிரிவுச் சாலையோரம் உள்ள பழுதடைந்த நிழற்குடையை பராமரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் திண்டுக்கல் சாலையில் கோடங்கிப்பட்டியை தாண்டியதும் கொக்கம்பட்டி, மதுரை பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலைப்பிரிவு பகுதியில் இந்த பகுதியின் வழியாக செல்லும் மினி பஸ்கள் மற்றும் திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் செல்லும் பேரூந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் தற்போது சுற்றிலும் புதர்கள் மண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே இதனை பயன்படுத்திட முடியாமல் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இதனை மாற்றி தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொக்கம்பட்டி பிரிவுச் சாலையோரம் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடையை மாற்றி, புதிதாக கட்டித் தருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Kokkampatti Division ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி