×

ஊராட்சி தலைவராக சுயேச்சைகளை வளைக்கும் ஆளுங்கட்சி

உத்தமபாளையம், ஜன.10: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் மெஜாரிட்டியாக அதிமுக வெற்றி பெற்ற உத்தமபாளையம், கம்பம் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள் தவிர மற்ற ஒன்றியங்களில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிட கவிழ்ப்பு வேலைகளில் இறங்கி உள்ளனர். இதற்காக மெஜாரிட்டியாக வெற்றி பெறாத சின்னமனூர், போடி உள்ளிட்ட ஒன்றியங்களில் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கக்கூடிய ஒன்றிய கவுன்சிலர்களை வளைக்கும் பணியில் இறங்கி உள்ளனர். இதனிடையே மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. 8 ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருமே சுயேச்சையாகத்தான் கருதப்படுவர். இவர்களுக்கு கட்சி சின்னங்கள் கிடையாது. ஆனால், அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளை பொறுத்தவரை ஊராட்சி தலைவர்களில் எத்தனை பேர் அதிமுக ஆதரவாளர்கள், எத்தனைபேர் திமுக ஆதரவாளர்கள், தவிர அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு தலைவர்கள் எத்தனைபேர், டிடிவி.தினகரனின் அமமுகவினர் எத்தனைபேர் என்ற பட்டியலை ரகசியமாக எடுத்து வருகின்றனர்.

ஊராட்சி தலைவர்களாக ஜெயித்தவர்களிலும், அதிமுக ஆதரவு மனப்பான்மையை ஏற்படுத்திட தங்களது அஸ்திரத்தை காட்ட தொடங்கி உள்ளனர். அதிக நிதி ஒதுக்கீடு, ஆளுங்கட்சி ஆதரவு உள்ளிட்ட மனநிலைகளை ஏற்படுத்தி தங்களது வசம் இழுப்பதற்கான முயற்சிகளில் மறைமுகமாக களம் இறங்கி உள்ளனர். மாவட்ட அளவில் அதிமுக ஆதரவு தலைவர்களை ஒன்று திரட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாக அழைத்து செல்வதற்கான திட்டங்களும் தயாராகி வருகிறது.கிராம ஊராட்சிகளில் துணைதலைவர் பதவியிடங்களிலும், அதிமுக கவனம் செலுத்திட தயாராகி வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : party ,independents ,panchayat ,
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...