×

எவரெஸ்ட் பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இன்டர்வியூ

கடையநல்லூர், ஜன. 10:  கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜேபிஎம் குரூப் நீல் மெட்டல் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. கல்லூரி  முதல்வர் தமிழ்வீரன் வரவேற்றார். எவரெஸ்ட்  பாலிடெக்னிக், ஐஆர்டி பாலிடெக்னிக், ஏஞ்சல் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கேம்பஸ்  இன்டர்வியூவில் பங்கேற்றனர். ஜேபிஎம் குரூப் நீல் மெட்டல்  நிறுவன மனிதவள மேலாளர் ரவிச்சந்திரன், நேர்முகத் தேர்வை நடத்தினார். இதில் தேர்வான மாணவர்களுக்கு எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி  முதல்வர் தமிழ்வீரன் மற்றும் ரவிச்சந்திரன் பணி நியமன ஆணையை வழங்கினர். நேர்முகத்  தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி சேர்மன் முகைதீன்  அப்துல்காதர் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை எவரெஸ்ட்  பாலிடெக்னிக் கல்லூரி  துறை தலைவர்கள் வெங்கடாசலம், தங்கபிரதீப்,  செந்தூர்பாண்டியன், மேலாளர்கள் மகேஸ்வரன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Everest Polytechnic ,
× RELATED கடையநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்