×

மறைமுகத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு தேவை

தேனி, ஜன. 10: தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக மாவட்ட பொறுப்பாளர், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம்.என்.ராமகிருஷ்ணன் நேற்று மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
 இதில், தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ஜன.11ம் தேதி நடக்க உள்ளது.

இதில் தேனி, சின்னமனூர், பெரியகுளம், க.மயிலாடும்பாறை, போடி மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியங்கள் மிகமிக பதற்றமான ஒன்றியங்களாக உள்ளன. எனவே, இந்த ஒன்றியங்களில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலுக்கு சென்று வரும்வரை போதிய போலீஸ் பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். அவருடன் மாவட்ட துணைச்செயலாளர் ராஜாராம், தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!