×

தேனி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன. 10: தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. சண்முகம் தலைமை வகித்தார். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மின்சார சட்டதிருத்த மசோதா 2018ஐ கைவிட வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும். மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை முழு நேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,Theni Electric Office ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்