×

பல லட்சம் ரூபாய் செலவில் கீழக்கரையில் பேவர் பிளாக் சாலை

கீழக்கரை, ஜன. 10: கீழக்கரை தெற்குதெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சார்பில் பேவர் பிளாக் கற்கள் சாலை பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் பழுதானதால் அந்த கற்களை தோண்டி எடுத்துவிட்டு குடிநீர் குழாயை சரிசெய்த நகராட்சி நிர்வாகம் மீண்டும் அந்த இடத்தை மூடாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடைக்கப்பட்ட அந்த கற்களை மீண்டும் சரிசெய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நன்றாக இருந்த பேவர்பிளாக் கற்களை குடிநீர் குழாய்களை சரி செய்வதற்காக பிரித்த நகராட்சி நிர்வாக நிர்வாகம் அதை சரி செய்யாமல் அப்படியே போட்டு விட்டது. இதனால் அந்தக் கற்களை சிறுவர்கள் எடுத்து உடைத்து விளையாடுகின்றனர். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் செல்லும் பள்ளி குழந்தைகள் கால் தடுக்கி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். ஆகவே உடனடியாக இந்த பேவர்

Tags : suburbs ,Beaver Block Road ,
× RELATED பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்...