×

தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜன.10:தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (10ம்தேதி)  தனியார் வேலைவாய்ப்பு முகாம்  நடக்கிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (10ம்தேதி) காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி முதல் தெருவிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இம்முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில், 10, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...