×

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு விநியோகம் துவங்கியது

கொடைக்கானல், ஜன. 10: தை பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாய விலை கார்டு வைத்திருப்பவர்களுக்கு பச்சரிசி, வெல்லம், உலர் திராட்சை, முந்திரி, கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இத்திட்டம் நேற்று முதல் துவங்கி ஜன.13ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் துவங்கியது.
*கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலையில் தலைவர் தர் தலைமையிலும், தாசில்தார் வில்சன், துணை தாசில்தார் ரவி முன்னிலையிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
*பட்டிவீரன்பட்டி பகுதி ரேஷன் கடைகளில் வத்தலக்குண்டு அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன் பொங்கல் பரிசு வழங்கினார். கே.சிங்காரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தலைவர் முருகன், அய்யம்பாளையத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சவுந்திரபாண்டியன், சித்தரேவுவில் கூட்டுறவு சங்க தலைவர் விஜயன் ஆகியோர் பொங்கல் பரிசினை வழங்கினர்.
*வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோடு, பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் ரேஷன் கடைகளில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினம் பொங்கல் பரிசு வழங்கினார்.
*நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அசோகன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினர்.

Tags : Dindigul district ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...