×

ஒன்றிய தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் செல்போன் ‘நோ’

திண்டுக்கல், ஜன. 10: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் இடங்களில் கைப்பேசி எடுத்து செல்ல கூடாது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு கடந்த ஜன. 2ம் தேதி வெளியிடப்பட்டது.
மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் நாளை ஜன.11 அன்று காலை 11 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் மதியம் 3.30 மணிக்கும் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்களில் ஒருவர் வேட்பு மனுவில் முன்மொழிய வேண்டும். மற்றொருவர் வழிமொழிய வேண்டும். தேர்தல் நடைபெறும் இடங்களில் உறுப்பினர்கள் வாக்குச்சீட்டினை பெற்று கொண்டு வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ள மறைவிடத்திற்கு சென்று அம்புகுறி ரப்பர் முத்திரையினை பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மறைமுக தேர்தல்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான அனைத்து மறைமுக தேர்தல் நடவடிக்கைகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படவுள்ளது. மேலும் மறைமுக தேர்தல் நடைபெறும் வளாகத்திற்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலரை தவிர மற்றவர்கள் கைப்பேசி எடுத்து செல்ல கூடாது. ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொடிய ஆயுதங்கள், உபகரணங்கள் (பேனா உட்பட) கூட்ட அறைக்குள் எவரும் எடுத்து செல்லக் கூடாது. இதனை காவல்துறை அலுவலர்கள் தக்கவாறு உறுதி செய்திட வேண்டும். மறைமுக தேர்தல்கள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விதிகளுக்கு உட்பட்டு நடத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் இடங்களில் கைப்பேசி எடுத்து செல்ல கூடாது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு கடந்த ஜன. 2ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் நாளை ஜன.11 அன்று காலை 11 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் மதியம் 3.30 மணிக்கும் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு வருகை தந்த உறுப்பினர்களில் ஒருவர் வேட்பு மனுவில் முன்மொழிய வேண்டும். மற்றொருவர் வழிமொழிய வேண்டும். தேர்தல் நடைபெறும் இடங்களில் உறுப்பினர்கள் வாக்குச்சீட்டினை பெற்று கொண்டு வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ள மறைவிடத்திற்கு சென்று அம்புகுறி ரப்பர் முத்திரையினை பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். மறைமுக தேர்தல்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான அனைத்து மறைமுக தேர்தல் நடவடிக்கைகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படவுள்ளது. மேலும் மறைமுக தேர்தல் நடைபெறும் வளாகத்திற்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலரை தவிர மற்றவர்கள் கைப்பேசி எடுத்து செல்ல கூடாது. ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொடிய ஆயுதங்கள், உபகரணங்கள் (பேனா உட்பட) கூட்ட அறைக்குள் எவரும் எடுத்து செல்லக் கூடாது. இதனை காவல்துறை அலுவலர்கள் தக்கவாறு உறுதி செய்திட வேண்டும். மறைமுக தேர்தல்கள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விதிகளுக்கு உட்பட்டு நடத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags : election ,vice president ,union president ,
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...