×

கெங்கவல்லியில் அசுர வேகத்தில் சென்ற காரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

கெங்கவல்லி, ஜன.10: கெங்கவல்லியில் குடிபோதையில் காரை அசுர வேகத்தில் ஓட்டிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியை சேர்ந்த தாசன் மகன் மணி(21). இவர் நெல் அறுவடை இயந்திர டிரைவராக உள்ளார். இவர் நேற்று மாலை 5 மணியளவில், தனது சகோதரி மகனான ஆத்தூர் அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த வல்லரசு(18) என்பவரை அழைத்துக் கொண்டு, கெங்கவல்லி பஸ் ஸ்டாப் வழியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரில் அசுர வேகத்தில் சென்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், சுமார் 2 கி.மீ தூரம் காரை துரத்திச் சென்று தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் சிவன் கோயில் அருகில் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த கெங்கவல்லி எஸ்எஸ்ஐ கோபால் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்த மணி குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவத்தால் கெங்கவல்லி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : public ,Kengavalli ,
× RELATED அதிகரித்து வரும் வெயில்...