×

திருச்செங்கோட்டில் மாநில செஸ் போட்டிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு

திருச்செங்கோடு, ஜன.10: திருச்செங்கோட்டில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள், மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. நாமக்கல் மாவட்ட செஸ் பவுண்டேசன் தலைவர் டாக்டர் ரமேஷ், போட்டிகளை துவக்கி வைத்தார். செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இதி்ல் 25 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில்  34 பேர், சர்வதேச தரப்புள்ளிகள்  பெற்றனர். போட்டியானது 7, 9,11,13,15 வயது மற்றும் பொது பிரிவு என 6 பிரிவாக நடந்தது. இதில் 7 வயது மாணவர்  பிரிவில் ஹம்ஹர்சந், யக்ஷீத், குகன், மாணவிகள் பிரிவில் தர்சனா, சஞ்சனா தியாரதி, வைணவி நேகா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பெற்றனர். 9 வயது பிரிவில்  தன்வந்த், சிவநேத்ரன், ஷாஸ்வினித், மாணவிகள் சனா, தியாஸ்னா, நயா ஆகியோர் முதல் 3 இடங்களை வென்றனர். 11 வயது பிரிவில் விஸ்வேஸ், பரத்  மதியழகன், தருண் பிரணவ், மாணவிகள் சஷ்மிதா , லீனா , நிதன்யா ஆகியோர் முதல் 3 இடங்களில் வந்தனர். 13 வயது பிரிவில் நிதிஷ் ஜெயசரூன், நிலாஸ், சௌந்தர், மாணவிகள் கோபிகா, ரிதமிகா, ஜெய ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர். 15 வயது பிரிவில் சஞ்சய்குமார், பரத்குமார்,  யோகபிரியன், மாணவிகள் கலாதேவி, கிருத்திகா, ரக்ஷா ஆகியோர்  முதல் 3 இடங்களை வென்றனர். இவற்றில் முதல் 2 இடங்களை பெற்றவர்கள், தமிழ்நாடு  மாநில அளவிலான செஸ்போட்டியில் பங்கேற்க  தகுதி பெற்றனர். பொது பிரிவில் தர்சன், திருமலைசாமி, ராகுல், செல்வம் ஆகியோர் முறையே முதல் 4 இடங்களை பெற்றனர். இவர்களும் மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.  ஒவ்வொரு பிரிவுக்கும் 20 பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட செஸ் பவுண்டேசன் தலைவர் டாக்டர் ரமேஷ், செயலாளர் ஞானசேகரன், ஆதாயம், சிவம், ஐயப்பன்  ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தலைமை நடுவராக தேவேந்திரன் செயல்பட்டார்.

Tags : Student ,Tiruchengode ,state chess competition ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்