×

பாவை கலை அறிவியல் கல்லூரியில் மாணவிகளை ஊக்குவித்தல் நிகழ்ச்சி

ராசிபுரம், ஜன.10: ராசிபுரம் பாவை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெண் முன்னேற்றத்திற்கான பாவையின் குறிக்கோள் என்ற அமைப்பின் அடிப்படையில், பல்வேறு சாதனையாளர்களையும், தடைகளை தாண்டி தலைமை கொள்பவர்களை அடையாளம் கண்டு,  அவர்களை கொண்டு மாணவிகளை ஊக்கப்படுத்தி உருவாக்கி வருகிறது. அவ்வகையில் ‘அன்பே இறை, அறிவே மறை, துணிவே துணை” என்ற தலைப்பில் ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி திருவள்ளுவர் குருகுல தொடக்கப்பள்ளியின் தலைமை நிர்வாகியும், நரிக்குறவர் சமுதாயத்தின் முதல் பெண் பொறியியல் பட்டதாரியுமான சுவேதா மகேந்திரன் கலந்து கொண்டு பயிற்சியளித்தார். விழாவிற்கு, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை தாங்கினார்.   இளங்கலை கணினி அறிவியல் முதலாமாண்டு மாணவி பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் நடராஜன்,  சிறப்பு விருந்தினர் சுவேதா மகேந்திரனுக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர், கவிஞர் கவிதாசன்  கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவிகளுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலாமாண்டு இயற்பியல் துறை மாணவி ஆப்ரின் பாத்திமா நன்றி கூறினார். விழாவில் பாவை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி, கல்வி முதன்மையர் செல்வி, நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர், வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் மோகன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Pawai College of Art ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு