×

கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்பு

போச்சம்பள்ளி, ஜன.10:  காவேரிப்பட்டணம் ஒன்றியம், கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கீதாகோவிந்தசாமி பதவி ஏற்றார். போச்சம்பள்ளி ஒன்றிய திமுக மீனவர் அணி துணை அமைப்பாளரும், கோட்டப்பட்டி ஊராட்சி திமுக மேலவை பிரதிநிதியுமான கோவிந்தசாமியின் மனைவி கீதா கோவிந்தசாமி, உள்ளாட்சி தேர்தலில் கோட்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். விழாவில் ஊர்கவுண்டர் ராஜேந்திரன், ஹரி மணியகார், வினய்கார்த்திக் மணியகார், சாதிக்பாஷா, முத்து, ராஜேந்திரன், சண்முகம், ஏகாம்பரம், முத்துவல்லி பாஷா, அன்பு, நவாஸ், துரை, அன்வர்பாஷா, பழனிவாசன், முருகன், காளியப்பன், ராஜூ, மாது, விக்னேஷ், சலீம், சக்திவேல், ராணிமாது, சிவலிங்கம், மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சர்தார் நன்றி கூறினார்.

Tags : President ,Kotapatti Panchayat Council ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...