×

வேட்பாளர் பெயர் பட்டியலில் இல்லாததால் வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு

பென்னாகரம், ஜன.10: பென்னாகரம் அருகே, ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை ஊராட்சி 10வது வார்டு செம்மனூரில், வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜா, செல்வம், ரமேஷ், குமார், சிவக்குமார் ஆகிய 5 பேர் ேபாட்டியிட்டனர். கடந்த 30ம் தேதி பென்னாகரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு பதிவு நடந்தது. இதில், மொத்தம் 426 வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த போது, ேவட்பாளர் ராஜாவின் பெயர், 10வது வார்டு வாக்காளர் பட்டியலில் இல்லை. எனவே, அவர் எப்படி ேபாட்டியிடலாம் என சக ேவட்பாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை பென்னாகரம் பிடிஓ அலுவலகத்தில், தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, இதில் ராஜா 183 வாக்குகளும், குமார் 54 வாக்குகளும், செல்வம் 45 வாக்குகளும், சிவக்குமார் 41 வாக்குகளும், ரமேஷ் 84 வாக்குகளும் பெற்றனர். இதில் 19 வாக்குகள் செல்லாதவை என கூறப்பட்டது. இதில் ராஜா 183 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். இதை எதிர்பார்க்காத சக ேவட்பாளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வெற்றி பெற்றதாக கூற முடியும் என கூறி, தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து, யார் வெற்றி பெற்றார்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் தண்டபாணி கூறிவிட்டு சென்றார்.

Tags : Ward ,election ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி