×

மறியலில் கைதானவர்களுக்கு காவலன் செயலி விழிப்புணர்வு

மஞ்சூர், ஜன.10: மஞ்சூரில் மறியலிவ் கைதானர்வர்களுக்கு காவலன் செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மஞ்சூரில் நேற்று முன்தினம் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் சி.ஐ.டி.யூ., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மேல் முகாமில் உள்ள மின்வாரிய மனமகிழ் மன்ற கட்டிடத்தில் தங்க வைத்தனர்.  இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா, எஸ்.ஐ. ராஜ்குமார் மற்றும் போலீசார் காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து காவலன் செயலி பதிவிறக்க செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா கூறியதாவது:- மஞ்சூர் காவல் சரகத்தின் சார்பில் அரசு, தனியார் பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் காவல்துறையின் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது செல்போன்களில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றார்.

Tags : raid ,
× RELATED ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல்...