×

போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்த விளையாட்டு போட்டி

ஊட்டி, ஜன.10: நீலகிரி மாவட்டத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.  நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, எல்லையோர கிராமங்களில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு என சிறப்பு முகாம்களை நடத்துகின்றனர். இந்நிலையில், மேலும் இதனை வலுப்படுத்தும் வகையில் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஊட்டி ஜி1 காவல் நிலையம் சார்பில் ஊட்டி அருேகயுள்ள தீட்டுக்கல் ஜெ.எஸ்.எஸ். பள்ளி மைதானத்தில் கபடி, வாலிபால், தடகள போட்டிகள் மற்றும் கராத்தே போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் கலந்துக் கொண்டனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக ஊட்டி டவுன் டி.எஸ்பி. சரவணன் போட்டிகளை துவக்கி வைத்தார். ஜி1 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயம் தலைமையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

Tags : Police Competition for Public Relations ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...