×

தேனாடு பகுதியில் காட்டுமாடு உலா

ஊட்டி, ஜன.10: நீலகிரி  மாவட்டத்தில் பெரும்பாலனவை வனப்பகுதி என்பதால் கரடி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள்ள உள்ளன. இவை அவ்வப்போது வனங்களில் இருந்து வெளியேறி குடியிருப்பகுதிகளில் இறைதேடி வருகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து குடியிருப்புகளிலிலேயே தஞ்சமடைகின்றனர். இந்நிலையில் ஊட்டி அருகேயுள்ள தேனாடு மற்றும் மைனலை மட்டம் பகுதியில் அடிக்கடி  காட்டுமாடு ஒன்று பகல்  நேரங்களிலேயே குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் வீட்டை  விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். எனவே, இந்த காட்டு மாடுகளை விரட்ட  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கூடலூர்: கூடலூர்-மைசூர் பிரதான சாலையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் மற்றும் பணிமனை ஆகியவை உள்ளது. பணிமனைக்குள் நேற்று அதிகாலையில் காட்டுமாடு ஒன்று உள்ளே புகுந்தது. அங்கு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பணியாளர்கள் காட்டுமாட்டை விரட்ட முயற்சி செய்தும் அது சிறிது நேரம் பணிமனைக்கு உள்ளேயே சுற்றிப் திரிந்தது. பின் பிரதான சாலைக்கு வந்து  விவசாய நிலங்களில் இறங்கி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

Tags : Thenadu ,area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...