×

குன்னூர்-ஊட்டி சாலையில் பேருந்து படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்

குன்னூர்,ஜன.10: நீலகிரி மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இல்லாததால் பெரும்பாலும் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். குன்னூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் அதிகளவில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். காலை நேரங்களில் குன்னூர்-ஊட்டி இடையே குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் கடும் கூட்ட நெரிசல் மத்தியில் பயணித்து வருகின்றனர். மேலும் படியில் தொங்கியபடி பெண்கள் உட்பட மாணவர்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.  எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் போக்குவரத்து துறை சார்பில் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குன்னூரில் இருந்து ஊட்டி வரை கிட்டத்தட்ட 15 கி.மீ. தொலைவு வரை படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை கண்டு அவர்களின் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக காலை நேரங்களில் குன்னூர்-ஊட்டி இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : road ,Coonoor-Ooty ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...