×

வாலங்குளத்தில் ஆகாய தாமரை அகற்றும் பணி தீவிரம்

கோவை, ஜன.10: கோவை வாலங்குளத்தில் ஆகாய தாமரை அகற்றும் பணி மாநகராட்சி சார்பில், தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன்குளம்,  வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், நரசாம்பதி, செல்வாம்பதி,  செல்வசிந்தாமணி ஆகிய எட்டு குளங்கள் உள்ளன. இந்த எட்டு குளங்களில் ஒரு  சில குளங்களை தவிர பெரும்பாலான குளங்களில் ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது.  இதனால், தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, வாலாங்குளம்,  முத்தண்ணன்குளம், செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம்,  சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட குளங்களில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு  அதிகளவில் உள்ளது.  இதனிடையே வாலாங்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு  முன்னர் ஆகாயத தாமரை அகற்றும் பணி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது.  இருப்பினும் தற்போது குளத்தில் ஆகாயத்தாமரை பரவிக்காணப்படுகிறது. மூன்று  மாதத்திற்கு ஒருமுறை ஆகாய தாமரை அழுகி விடுவதால் குளத்து நீர் முற்றிலும்  மாசடைந்து காணப்படுகிறது. தற்போது மீண்டும் வாலங்குளம் பகுதியில் ஆகாய தாமரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : Air Lotus Removal ,
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை