×

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முறைகேடுகளை தடுக்க 36 சிறப்பு குழு

கோவை,ஜன.10: பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முறைகேட்டை தடுக்க 36 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரிலிருந்து பலர் சொந்த ஊருக்கு திரும்புவதால் ரயில்களில் கூட்ட நெரிசல் தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூட்ட நெரிசலில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தல், முன்பதிவு செய்யாமல் அதற்குரிய பெட்டியில் பயணித்தல், வேறு நபர்களின் பெயர்களில் பயணிப்பது உள்ளிட்ட முறைகேட்டை தடுக்க நாளை முதல் 20ம் தேதி வரை சிறப்பு கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சேலம் ரயில்வே கோட்டத்தில் வணிக முதுநிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் 36 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் சேலம், கோவை, ஈரோடு, கரூர் ரயில்வே ஸ்டேஷன்களில் செல்லும் ரயில்களில் சோதனை நடத்துவர். முறைகேட்டில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : committee ,festival ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா