×

மாநகராட்சியை கண்டித்து இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன. 10:  கோவை மாநகராட்சியை கண்டித்து கோவையில் இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகர் 57-வது வார்டு மசக்காளிபாளையம், ஜி.வி. ரெசிடன்சி,  சவுரிபாளையம்,  ஆர்.டி.ஓ. பயிற்சி மைதானம் சந்திப்பில்,  பெரிய ஓடை அருகில்,  திட்டச்சாலை  அமைய உள்ள இடத்தில், கோவை மாநகராட்சி சார்பில்,  குப்பைகளை தரம்  பிரிக்கும்  கிடங்கு  அமைக்கும் கட்டுமான பணி  மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜி.வீ. ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் சுமார் 5  ஆயிரத்திற்கும்   மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட    மக்கள் வசிக்கின்றனர். மேலும் இந்த குப்பை கிடங்கு அமைய  இருக்கும் இடத்திற்கு   அருகில்தான் ஆர்.டி.ஓ. பயிற்சி மைதானம் உள்ளது. தினமும்  ஆயிரக்கணக்கான   மக்கள் வந்து செல்லும் இடமாக இது உள்ளது.இந்த பகுதியில்   குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டால், துர்நாற்றம்   வீசிச்கொண்டே இருக்கும். சுகாதார சீர்கேடு ஏற்படும். இப்பகுதி மக்கள் நலனை கருத்தில்கொண்டு, இப்பணியை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜி.வி. ரெசிடன்சி, ஆர்.டி.ஓ.பயிற்சி மைதானம்   அருகே   இன்று (வெள்ளி) காலை 10 மணிக்கு கண்டன   ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அனைவரும் திரண்டு வரும்படி அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : DMK ,corporation Demonstration ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி