×

பொங்கல் பரிசுத்தொகுப்பு; கலெக்டர் எச்சரிக்கை

கோவை, ஜன. 10: பொங்கல் பரிசுத்தொகுப்பு முறையாக வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டில் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டிலும் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு, முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் கடந்த 6ம் தேதி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 70 ஆயிரத்து 609 அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகை மற்றும் ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியை, 09.01.2020 அன்று துவங்கி, 12.01.2020-க்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கூட்ட நெரிசலை தவிர்க்க, அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த நாட்களில், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் வரிசையில் நின்று, இப்பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இதில், ஏதேனும் குறைபாடு இருப்பின், 0422-2300569 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், கீழ்க்கண்ட அதிகாரிகளின் மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அதன் விவரம்:
* மாவட்ட வழங்கல் அலுவலர், கோவை - 94450-00245
* மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் - 94433-58874
* கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் - 73387-20301
* பொது விநியோக திட்ட துணை பதிவாளர் - 93626-13765
* உதவி பங்கீட்டு அலுவலர், சரகம்-1 - 94450-00250
* குடிமைப்பொருள் தனி தாசில்தார், கோவை வடக்கு - 94450-00246
* குடிமைப்பொருள் தனி தாசில்தார், கோவை தெற்கு - 94450-00247
* குடிமைப்பொருள் தனி தாசில்தார், பொள்ளாச்சி - 94450-00252
* குடிமைப்பொருள் தனி தாசில்தார், அன்னூர் - 94457-96442
* வட்ட வழங்கல்  அலுவலர், கிணத்துக்கடவு - 99949-57589
* வட்ட வழங்கல்  அலுவலர், சூலூர் - 94450-00406
* வட்ட வழங்கல்  அலுவலர், பேரூர் - 94450-00249
* வட்ட வழங்கல்  அலுவலர், மதுக்கரை - 94450-00248
* வட்ட வழங்கல்  அலுவலர், ஆனைமலை - 98436-62932
* வட்ட வழங்கல்  அலுவலர், மேட்டுப்பாளையம் - 94450-00251
* வட்ட வழங்கல்  அலுவலர், வால்பாறை - 97892-30138
இவ்வாறு கலெக்டர் ராஜாமணி கூறினார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்