×

முருகா என்பது சக்தி வாய்ந்த சொல்

கோவை, ஜன.10:  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘எப்போ வருவாரோ’ சொற்பொழிவு நிகழ்ச்சி கோவை கிக்கானி பள்ளியில் நடந்து வருகிறது. அருணகிரி நாதர் குறித்து நேற்று சொற்பொழிவாளர் சுந்தரம் பேசியதாவது:  அருணகிரி நாதர் கந்தர் அனுபூதி, திருப்புகழ், வேல் விருத்தம், மயில் விருத்தம் போன்ற பாடல்களை பாடியுள்ளார். அவரின் பெற்றோர் விவரம் அறியப்படவில்லை. அக்காவின் உதவியால் வளர்ந்த இவர், தீய பழக்கத்தால் நோயாளியானார்.
மனம் வருந்தி வேதனைப்பட்ட இவர், பெரியவர் ஒருவரை சந்தித்தார். முருகன் பெயர் சொன்னால் குறை தீரும் என்றார் அவர். அவரின் சொல்படி அருணகிரி நாதரின் வாழ்க்கை மாறியது. கந்தர் அனுபூதியில் 51 பாடல்களை அவர் பாடியுள்ளார். திருசெங்கோட்டு மலை பாம்பு மலை, நாகமலை என அழைக்கப்படுகிறது. படிப்படியாக ஏறி சென்று முருகனை வணங்கினால் வாழ்க்கை படியில் முன்னேறலாம் என அருணகிரி நாதர் உணர்த்தியுள்ளார். நமசிவாய, சிவாயநமஹ என்பது சக்தி வாய்ந்த சொல். இதை சொல்பவர்கள் மிக சவுக்கியமாக இருப்பர். மன்னர் ஒருவர் தேர் ஓட்டி சென்ற போது கன்றுக்குட்டி குறுக்கே வந்தது. தேர் சக்கரத்தில் சிக்கி கன்று குட்டி இறந்தது. தெரியாமல் செய்த தவறுக்கு வருந்திய மன்னர் முனிவர் ஒருவரை தேடி சென்றார். முனிவர் நீராட சென்ற நிலையில் அவரின் 12 வயது மகன், முருகா என மூன்று முறை சொல்ல சொன்னார். சக்தி வாய்ந்த சொல்லில் அவரின் பாவம் நீங்கியதாக அருணகிரி நாதர் குறிப்பிட்டுள்ளார்

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113...