பெரும்புதூர் பிடிஓ அலுவலகத்தில் 4 ஊராட்சி செயலர் பணிக்கு நேர்காணல்

பெரும்புதூர், ஜன. 10: பெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம், கோட்டூர், சேந்தமங்கலம், மாத்தூர் ஆகிய 4 ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நேர்காணல் 9 மற்றும் 10ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள மாகாண்யம், கோட்டூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு நேற்று பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

இதில் உதவி திட்ட அலுவலர் ராஜசேஜரன், பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் நஹீம் பாஷா, பிச்சியம்மாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், அம்பிகாதேவி ஆகியோர் கலந்துகொண்டு நேர்காணல் செய்தனர்.
இதில் 155 பேர் கலந்து கொண்டனர். இன்று (10ம் தேதி) சேந்தமங்கலம், மாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : Panchayat Secretary ,office ,Perimputhur PDO ,
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு